Sort by:
9 products
9 products
💬சரி, அல்கண்ணா தேன் இதழ் (Alkanna Lip Balm) என்பது என்ன ?
உங்கள் உதடுகளை மென்மையாகவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தை கொடுத்து அழகு பெற செய்யவும் 100% இயற்கையான பொருட்களான, வேம்பாளம் பட்டை, ஆமணக்கு எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய், பண்ணீர் ரோஜா மற்றும் தேன் மெழுகு ஆகியவற்றைக் கொண்டு எந்த வித ரசாயனமும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்ட உதட்டு மெழுகு (Lip Balm)
💖அப்படி என்ன இதன் சிறப்பு ?
வேம்பாள பட்டையின் (Alkanna tinctoria) தனித்துவம் என்னவென்றால் இதில் இயற்கையான சிவப்பு நிறமி கொண்ட காரணிகள் உள்ளதால் இது உதட்டின் உள்ளே உருவி சென்று இளம் சிவப்பு நிறத்தை தரக்கூடியது அது மட்டும் அல்லாமல் இந்த பட்டையில் நோய் எதிர்ப்பு பண்பு அதிகமாக உள்ளதால் உங்கள் உதட்டிற்கு நிறமூட்டுவது மட்டுமல்லாமல் நோய் தொற்று கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது.இதில் பயன்படுத்தப்பட்ட தேன் மெழுகு உங்கள் வெடித்த உதட்டிற்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு மினுமினுப்பான உதட்டினை பெற உதவுகிறது
👧🏻இதை யார் பயன்படுத்தலாம்?
மென்மையான, ஆரோக்கியமான மற்றும் இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் வேண்டுவோர் எவரும் பயன்படுத்தலாம். ரசாயனம் கலந்த உதட்டுச் சாயங்களை பயன்படுத்தி அவதிக்குள்ளானவர்கள் நமது தேன் மெழுகினை தாராளமாக பயன்படுத்தலாம் ஏனெனில் இதில் எந்தவித ரசாயனமும் சேர்க்கப்படவில்லை என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நான் இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
குளித்த பிறகு அல்லது உங்கள் உதடுகள் வறண்டதாக உணரும் எந்த நேரத்திலும் தடவவும்இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் பயன்படுத்துவது சிறந்ததுஅழகு தோரணைக்காக நீங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்
🌱இது உண்மையில் இயற்கையானதா?
ஆம்! பாரம்பரிய இயற்கை அறிவைக் கொண்டு மூலிகை வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட இந்த இயற்கையான உதட்டு மெழுகு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம் எந்தவித பக்கவிளைவும் இல்லை.
குறிப்பு : வாய் வழியாக உட்கொண்டாலும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது மாறாக ஊட்டசக்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது
ஆவாரம்பூ தேநீர் - சரும பளபளப்பு மற்றும் சர்க்கரை சமநிலைக்கு
ஆவாரம்பூ தேநீர் - சரும பளபளப்பு மற்றும் சர்க்கரை சமநிலைக்கு
உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் நன்மை
பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஆவாரம் பூக்களை உலர்த்தி அந்த பொடியில் தயாரிக்கப்படும் இந்த பானமானது தோல் மினுமினுப்பை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உள்ளிருந்து பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது அதில் முக்கியமான ஒன்று ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரிய பங்கு வைக்கிறது எந்த ரசாயன கலவையும் இல்லாமல் முழுவதும் இயற்கையாக தயாரிக்கப்பட்ட இந்த பானத்தை காபின் அல்லாத பானமாக தினமும் அருந்தலாம்.
ஆவாரம்பூ டீயை மக்கள் விரும்பத்தக்க பயன்கள்
🌿ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மூலிகை ஆவாரம் பூ
🌿இதில் சேர்க்கப்பட்டுள்ள இஞ்சி மற்றும் சீரகம் செரிமானத்தை ஆதரித்து மேம்பட்ட குடல் இயக்கத்திற்கு உதவுகிறது
🌿இதில் உடலை குளிர்ச்சியூட்டும் பண்புகள் கொண்டுள்ளதால் உடல் நச்சுக்களையும் நீக்கி தேகத்திற்கு பளபளப்பு கொடுக்க உதவுகிறது
🌿உடல் கொழுப்பை குறைக்க உதவுவதால் உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
🌿முழுவதும் இயற்கையான பானம் என்பதால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரையும் அனைவருக்கும் ஏற்ற ஒரு ஆரோக்கியமான பானம்
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ஆவாரம்பூ தேநீர் உதவியாக இருக்குமா?
நீண்ட காலமாக நமது பாரம்பரத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் சமநிலைப்படுத்த ஆவாரம்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது தொடர்ந்து பயன்படுத்துவதால் நிச்சயமாக ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவி புரியும். பாரம்பரிய மருத்துவம் பயிற்சிவித்த முறைப்படியே தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு தயாரித்துள்ளோம்.
தினமும் இந்த பானத்தை அருந்தலாமா ?
நிச்சயமாக தினமும் அருந்தலாம், ஏனெனில் இதில் எந்த வித ரசாயனமும் இல்லை காபின் போன்றவையும் இதில் இல்லை முழுவதுமாக மண்ணில் இருந்து கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவரும் இதனை காலையில் ஒரு முறை அல்லது மாலை ஒரு முறை தாராளமாக பயன்படுத்தலாம்.
எப்படி தயார் செய்வது?
வழக்கமான தேநீர் பொடியைப் போன்றே ஒரு ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ற அளவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் குழந்தைகளுக்காக.
முடி வளர்ச்சி ஊக்கி - கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான மூலிகை ஊட்டச்சத்து
முடி வளர்ச்சி ஊக்கி - கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான மூலிகை ஊட்டச்சத்து
கூந்தல் எண்ணெய் மற்றும் ஷாம்பூக்களைப் பயன்படுத்திய பின்பும் முடி உதிர்வு நிற்கவில்லையா?
உண்மையென்னவென்றால், ஆரோக்கியமான கூந்தல் என்பது உங்கள் உடலுக்கு அளிக்கும் ஊட்டச்சத்திலிருந்து தொடங்குகிறது. வெளிப் பராமரிப்பு உதவினாலும், உங்கள் முடி உண்மையில் வளர்வதற்கும், பளபளப்பாக இருப்பதற்கும், வலுவாக இருப்பதற்கும் உள்ளிருந்து ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதனால்தான் நாங்கள் கூந்தல் வளர்ச்சி ஊட்டச்சத்து (Hair Growth Intake) என்ற இந்த இயற்கையான லேகியம் கலவையை உருவாக்கியுள்ளோம்.
இது ஏன் தனித்துவமானது?
இது உங்கள் உடல் எளிதாக உறிஞ்சிக்கொள்ளக்கூடிய, இயற்கையான உணவு அடிப்படையிலான லேகியம். ஒவ்வொரு கரண்டியிலும் உங்கள் கூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது வெறும் வெளிப்புறப் பராமரிப்பு அல்ல, நிரந்தர வளர்ச்சி மற்றும் வலிமைக்கு ஆழமான, உட்புற ஊட்டத்தை அளிக்கிறது.
முடி வளர்ச்சிக்கான பலன்கள்
🌿பாதாம், ஆளி விதைகள், மற்றும் பூசணி விதைகள் ஆகியவை இயற்கையான புரதம் மற்றும் ஆரோக்கியமான ஊட்டங்களை வழங்குகின்றன, இது முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது.
🌿கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மற்றும் வல்லாரை போன்ற மூலிகைகள், முடி உதிர்வின் உள் காரணங்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
🌿கருப்பு எள், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி போன்ற பாரம்பரிய மூலிகைகள் முடியின் நிறத்தைத் தக்கவைக்க உதவும், இதனால் இளநரைத் தோற்றம் தாமதமாகலாம்.
🌿குங்குமப்பூ உச்சந்தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வேர்களுக்கு ஊட்டச்சத்துக்களை திறம்பட எடுத்துச்செல்ல உதவுகின்றன.
🌿இதில் உள்ள உலர் பழங்கள் மற்றும் விதைகள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றன.
இதில் எந்த செயற்கை கலப்படங்களும் இல்லை. உங்கள் உடலுக்குத் தேவையான 100% இயற்கையான, உணவுப் பொருட்களைக் கொண்டது.
🍵எப்படி பயன்படுத்துவது?
- அளவு: காலை, மதியம், இரவு உணவுக்குப் பிறகு ஒரு கரண்டி வீதம் எடுத்துக்கொள்ளவும்.
- எடுத்துக்கொள்ளும் முறை: வெதுவெதுப்பான பாலுடன் கலந்து குடிக்கலாம் அல்லது நேரடியாகவும் சாப்பிடலாம்.
- சிறந்த பலன்களுக்கு: தினமும் தவறாமல் இதை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
🧬ஏன் தொடர்ச்சியான பயன்பாடு அவசியம்?
கூந்தல் வளர்ச்சி ஊட்டச்சத்து கலவையை நீங்கள் மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் முழுமையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சி, கண்கூடாகத் தெரியும், நீடித்த பலன்களை அளிக்கும். உண்மையான மாற்றத்திற்கு நேரம் தேவை, உங்கள் கூந்தலுக்கு அந்த அர்ப்பணிப்பு அவசியம். இப்போது உங்கள் கூந்தலுக்கு உண்மையில் உள்ளிருந்து தேவைப்படும் ஊட்டச்சத்தை வழங்க வேண்டிய நேரம் இது.
முதியார் கூந்தல் எண்ணெய் - கூந்தலுக்கான பாரம்பரிய பராமரிப்பு
முதியார் கூந்தல் எண்ணெய் - கூந்தலுக்கான பாரம்பரிய பராமரிப்பு
தலைமுறைகளை கடந்து கூந்தலுக்கு இயற்கை பராமரிப்பு
முடி உதிர்வு, முடி வறட்சி, பொடுகு நீங்க அல்லது இயற்கையான பளபளப்பை விரும்புவோருக்கு, 100% மூலிகை முதியார் கூந்தல் எண்ணெய் உங்கள் உச்சந்தலையை ஊட்டமளித்து, உங்கள் தலைமுடியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் கூந்தலை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கிறது. ஒவ்வொரு துளி எண்ணெயிலும் இதன் மருத்துவ குணங்களை பாதுகாக்க சிறிய தொகுதிகளாக தயாரிக்கிறோம். இரசாயனங்கள் இல்லை. குறுக்குவழிகள் இல்லை.
முதியார் கூந்தல் எண்ணெயை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
🌿 ஒவ்வொரு துளியிலும் பலன்கள்:
தலைமுடி உதிர்தல், இளநரை, பொடுகு, தலைவலி, கண்களில் ஏற்படும் அசௌகரியம், மற்றும் பேன் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற உதவுகிறது, அதே நேரத்தில் உச்சந்தலையை குளிர்வித்து இதமாக்குகிறது.
💧 இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது:
தலைமுடியை நீரேற்றமாக, மென்மையாக மற்றும் பிளவுபடுவதை எதிர்க்கும் தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.
🪶 உச்சந்தலை நிவாரணம் மற்றும் ஆறுதல்:
அரிப்பு மற்றும் செதில் செதிலாக வருவதைக் குறைத்து, முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
💪 வலுவான வேர்கள், ஆரோக்கியமான முடி:
முடி உதிர்வதைக் குறைக்க வேர்களிலிருந்து ஊட்டங்களை அளிக்கிறது.
✨ இயற்கையாகவே பட்டுப் போன்ற பளபளப்பு:
உங்கள் தலைமுடியின் மென்மை மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை மேம்படுத்துகிறது.
🌸 100% மூலிகை:
முதியார் கூந்தல் இலை, ரோஸ்மேரி, கரிசலாங்கண்ணி, கருஞ்சீரகம், செம்பருத்தி, வெந்தயம், மிளகு, கீழாநெல்லி, மற்றும் 58+ மூலிகைகளின் நிறைந்த கலவையாகும்.
சூரிய ஒளி புடம்: மாற்றம்பெறதா மருத்துவகுணம்
எங்கள் முதியார் கூந்தல் எண்ணெய் நெருப்பில் சூடாக்கி ஒருபோதும் தயாரிப்பதில்லை, ஏனெனில் அதிக வெப்பநிலை மூலிகைகளின் இயற்கையான பண்புகளை மாற்றி, அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழக்கச் செய்கிறது. அதற்கு பதிலாக, சூரிய ஒளியின் சக்தியைப் பயன்படுத்தி மூலிகையின் ஊட்டச்சத்துக்களை மெதுவாக எண்ணெயில் இறங்கும்படியாக செய்கிறோம் மேலும் அதன் தூய்மை மற்றும் செயல்திறனைப் பாதுகாக்கிறோம். இந்த கவனமான செயல்முறை, மூலிகையின் முழு வலிமையையும் எண்ணெய் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்கிறது, இதனால் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சிறந்த கூந்தல் தைலமாக மாற்றம் பெறுகிறது.
தூயது. உங்கள் தலைமுடிக்கு ஏற்றது.
❌ பாரஃபின் இல்லை
❌ மினரல் எண்ணெய் இல்லை
❌ எஸ்எல்எஸ் அல்லது பாரபன்கள் இல்லை
✅ பிசுபிசுப்பு இல்லாதது, எண்ணெய் பசையற்றது, மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது.
சிறந்த பயன்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது
1.இரவு நேரம்: படுக்கைக்கு முன் உச்சந்தலை மற்றும் தலைமுடியில் மசாஜ் செய்யவும்.
2.காலை பராமரிப்பு: இயற்கையான முடி சுத்திகரிப்பை பயன்படுத்தி கழுவ வேண்டும் (வாரத்திற்கு 3 முறை சிறந்தது).
3.விரைவான பளபளப்பு: குளித்த பிறகு ஈரமான முடியில் 2-3 துளிகள் தடவவும்.
குறிப்பு : முதியார் கூந்தல் எண்ணெய் உங்கள் கூந்தலை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் முடி உடைவதை குறைத்து பளபளப்பு தன்மையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முடிக்கு உள்ளிருந்து ஊட்டச்சத்து கிடைத்தால் மட்டுமே ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். இதற்காக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது எங்கள் முடி வளர்ச்சி ஊக்கி வாங்கி பயன்படுத்தலாம். இதற்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளோம்
இங்கே சொடுக்கவும் : https://www.shevalonvarmakalai.com/ta/products/hair-growth-intake-natural-herbal-supplement-for-promoting-hair-growth
முடி வளர்ச்சி ஊக்கி பயன்படுத்துவது உங்கள் விருப்ப தேவைக்கு உட்பட்டது. ஆனால் சிறந்த பலனுக்கு இதனை பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.
அன்றாட சருமப் பராமரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று, ஏன்?
தூய கற்றாழை சாறு, குங்குமப்பூ மற்றும் சிவப்பு சந்தனம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்தக் குழுமம் அழகு பராமரிப்பு மட்டுமின்றி தோல் பராமரிப்புகளையும் சிறப்பாக செய்கிறது. இதில் எந்தவித ரசாயனமும் சேர்க்கப்படாததால் எந்தவித பக்க விளைவும் இல்லை எனவே ரசாயனம் கலந்த ஜெல்-க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.
✨அற்புதமான பயன்கள்
🌿வறண்ட சருமத்திற்கு மென்மை ஊட்டி பொலிவாக இருக்க உதவுகிறது
🌿தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை தழும்புகள் மெதுவாக மறைய உதவி புரியும்
🌿தோல் அரிப்பு மற்றும் தோல் அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்துவதால் இதிலிருந்து மீண்டு வரலாம்
🌿முகப்பரு மற்றும் சூட்டினால் வரும் வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உதவி புரியும்
🌿வெட்டு காயம் மற்றும் சூடான எண்ணெய், வெந்நீரால் ஏற்படும் தீக்காயம் மற்றும் அனைத்து வகையான தீக்காயங்களுக்கும் பயன்படுத்தலாம்
வழக்கமான மாய்ஸ்ரைசர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
மிக முக்கியமான ஒன்று, இது 100% இயற்கையானது எனவே எந்த வித பக்கவிளைவும் இல்லை. அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது, இது அழகு பராமரிப்பு மட்டும் இன்றி தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக உதவி புரிவதோடு மட்டுமல்லாமல் காயங்களுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.
👉 சரும பராமரிப்பை இன்றே தொடங்குங்கள்
கற்றாழை குங்குமா ஜெல், பசை போன்றோ அல்லது எண்ணெய் போன்றோ பிசுபிசு தன்மையுடன் இருக்காது. எளிதில் சருமத்தில் ஊடுருவி மென்மையான உணர்வை கொடுக்கும் என்பதால் தயக்கம் வேண்டாம் இது அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது.
முடி சுத்திகரிப்பான் - ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு
முடி சுத்திகரிப்பான் - ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு
உங்கள் தலைமுடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இரசாயனம் இல்லாத, மென்மையான வழியைத் தேடுகிறீர்களா?
எங்களின் மூலிகை கூந்தல் சுத்திகரிப்புப் பொடி, சீயக்காய், நெல்லிக்காய், அரப்பு, வேப்பிலை போன்ற இயற்கையான பொருட்களால் ஆனது. இவை கூந்தலுக்கு சிறந்த சுத்திகரிப்பையும், பாதுகாப்பையும் தருகின்றன. இது தலைமுடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றாமல், அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் மற்றும் தேவையற்ற கசடுகளை நீக்க உதவுகிறது.
இது அனைத்து விதமான கூந்தலுக்கும் ஏற்றது, தினசரி பயன்பாட்டிற்கு உகந்தது.
மென்மையான பராமரிப்பு, சிறந்த பலன்கள்
🌿கூந்தல் சுத்திகரிப்பு: முடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றாமல், அழுக்கு, எண்ணெய் மற்றும் கசடுகளை நீக்கி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.
🌿பொடுகு மற்றும் அரிப்பு: வேப்பிலை மற்றும் கஸ்தூரி மஞ்சள் போன்ற மூலிகைப் பொருட்கள், பொடுகு மற்றும் அரிப்புத் தொல்லையைக் குறைக்க உதவுகின்றன.
🌿கூந்தல் உதிர்வு: முடியின் வேர்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான உச்சந்தலைக்கு வழிவகுக்கிறது, இதனால் முடி உடைவது மற்றும் மெலிவது குறைகிறது.
🌿இயற்கையான பளபளப்பு: உங்கள் தலைமுடியை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும், இயற்கையான பளபளப்புடனும் வைத்திருக்க உதவுகிறது - கண்டிஷனர் தேவையில்லை!
🌿கூந்தலுக்கு மிருதுவான தன்மை: இந்த மூலிகை பொடி கூந்தலுக்கு ஊட்டமளித்து, முடிக்கு மென்மையான மற்றும் மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது.
🌿பசையற்ற உச்சந்தலை: இயற்கையான முறையில் சுத்தம் செய்வதால், உச்சந்தலையில் எண்ணெய் பசைத் தன்மையைக் குறைத்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
👉இரசாயன ஷாம்பூக்களிலிருந்து இந்த மூலிகை சுத்திகரிப்பிற்கு ஏன் மாற வேண்டும்?
இரசாயன ஷாம்பூக்கள் உங்கள் கூந்தலை சுத்தமாக வைத்திருந்தாலும், அவை பெரும்பாலும் இயற்கையான எண்ணெய்களை நீக்கி, கூந்தலை வறண்டு, உயிரற்றதாக மாற்றுகின்றன. ஆனால், எங்களின் மூலிகை கூந்தல் சுத்திகரிப்புப் பொடி, பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுர்வேதப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது உச்சந்தலைக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல், கூந்தலுக்கு ஊட்டமளித்து, ஒவ்வொரு முறை கழுவிய பிறகும் மென்மையாகவும், இயற்கையாகவே ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
❤️யாருக்கெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது
- முடி உதிர்தல் மற்றும் மெலிதல்
- பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பு
- இளநரை
- வறண்ட, மந்தமான அல்லது எண்ணெய் பசையுள்ள கூந்தல்
பயன்படுத்தும் முறை:
1. ஒரு தேக்கரண்டி முடி சுத்திகரிப்பான் பொடியை எடுத்துக் கொள்ளவும்.
2. தண்ணீர் அல்லது ரோஸ் தண்ணீருடன் கலந்து மென்மையான பசை போல் செய்யவும்.
3. கூந்தலில் அனைத்து பகுதிகளிலும் தோலின் மீது நன்கு படும்படி தடவவும்.
4. 5-10 நிமிடங்கள் விட்டு, பின்னர் நன்கு அலசவும். (சிறந்த பலன்களுக்கு வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்).
Kit Products – இதில் உள்ள பொருட்கள்
1.Muthiyar koonthal hair oil – முதியார் கூந்தல் எண்ணெய்
2.Hair cleanser – முடி சுத்தபடுத்தி
3.Hair growth Intake – முடி வளர்ச்சி ஊக்கி
Muthiyar koonthal hair oil
1.Muthiyar Koonthal Hair Oil Eliminates hair loss, grey hair, itching, split end, headaches, dandruff, watery eyes, clears eyesight and encourage healthy and long hair growth.
2.Helps hair to retain more moisture and helps to prevent split ends
3.Muthiyar Koonthal Hair Oil Provides vital hydration to scalp that may help to reduce itching and dandruff
4.Muthiyar Koonthal Hair Oil Helps to strengthen hair roots, detangles tresses and improve appearance of silkiness and shine in hair
5.Muthiyar Koonthal Hair Oil Contains multiple Herbs like muthiyar koonthal, karisaalai, vetiver Amla, Mulethi, Neel Patra,blackseed.
6.100% Natural Hair Oil. Paraffin Free/ Mineral Oil / SLS Paraben Free Muthiyar Koonthal Hair Oil Non sticky, non greasy formulation that could be left on hair through the day with confidence.
Direction of use:-
Take few drops of muthiyar koonthal oil and gently apply on your scalp and hair, do not handle your hair rough
1.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலம் முடிஉதிர்தல், இளநரை, தலையரிப்பு, பொடுகு, கண்ணெரிச்சல்,கண்ணில் நீர் வடிதல், பேன் தொல்லை, ஆகியவை நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், கண்பார்வை தெளிவடையும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
2.முடி அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் பிளவு முனைகளைத் தடுக்க உதவுகிறது
3.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலம் அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைக்க உதவும்
4.முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது
5.பட்டு போல் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் கூந்தல் வழவழப்பாக பிரகாசிக்க உதவுகிறது
6.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலமில் கரிசாலை, வெட்டிவர், நெல்லிக்காய், கருஞ்சீரகம், செம்பருத்தி, வெந்தயம், மிளகு, கீழாநெல்லி, ஆலம் விழுது போன்ற பல மூலிகைகள் உள்ளன.
7.100% இயற்கை எண்ணெய். பாரஃபின் / மினரல் ஆயில் போன்ற தீங்கு தரும் பொருட்கள் இல்லை.
8.முகத்தில் எண்ணெய் வழியாது, பிசுபிசுப்பாய் இருக்காது, தினமும் பயன்படுதலாம்.
உபயோகமுறை :-
சில சொட்டுகள் உள்ளங்கையில் எடுத்து முடியின் வேர்கால்களில் படும்படி தேய்க்கவும்
Hair Cleanser
1.Suitable for: All hair types , 100% Pure/Organic. Hand made powdered
2.Powder is commonly mixed into a paste, by mixing it with water or rose water based on the availabiliy
3.1 tablespoon Hair Pack powder Mix well with water and apply on hairs. You can use as per your requirement or with different combinations
4.This Product is suitable for :- For Hair Fall , For Making Hair Strong, For Dandruff Flakes, For Split Ends, For Hair Greying and/or Whitening, For Dry Brittle Hair, For Sticky Oily Hair, For Hair’s Shine, 5.For Thick Growing Hair, For Soft & Silky Hair
6.Both Mens and Womens can use. Apply on hairs and you will see good results.
1.அனைத்துவகையான முடிக்கும் ஏற்றது,100% பக்குவமாக சுத்தமாக எந்தவித ரசாயணமும் சேர்க்கபடவில்லை
2.பொடியானது தண்ணீர் அல்லது ரோஜா தண்ணீரில் கலந்து உபயோகபடுத்தலாம்
3. 1 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு பயன்படுதலாம் , உங்கள் முடியின் அளவை பொறுத்து மாறுபடும்
4.இது முடி உதிர்தல் , தலை சொறிதல், அரிப்பு, பொடுகுதொல்லை, பேன் தொல்லை, முடி வெடிப்பு , புழுவெட்டு , கிருமியினால் முடி உதிர்தல் போன்றவைகளுக்கு பயன்படுதலாம்
5.முடி அடர்த்தியாக வளரவும் நீண்டு வளரவும் அனைவரும் பயன்படுதலாம்
6.ஆண் பெண் இருவரும் பயன்படுதலாம்
Hair growth intake
முடி வளர வெளிஉபயோகமாக எண்ணெயோடு சேர்த்துஉடலுக்கு தேவையான சத்தையும் கொடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிட்டும். இந்த மூலிகை பொடி எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது.
பயன் :-
இளநரை, முடி உதிர்தல், தலை ஊறல், முடி வெடிப்பு, அடர்த்தி குறைவு,இரத்த குறைவினால் முடி உதிர்தல் போன்றவை சரியாகும் .
தேங்காய் உருக்கு எண்ணை - தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது
தேங்காய் உருக்கு எண்ணை - தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது
தேங்காய் உருக்கு எண்ணை ஏன் சிறந்தது?
வழக்கமாக தேங்காய் கொப்பரைகளை பதப்படுத்தி செக்கில் மசித்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக நேரடியாக தேங்காயிலிருந்து தேங்காய் பாலை பிரித்து எடுத்து அதனை பக்குவமாக காய்ச்சி அதில் உள்ள தாதுக்களை சேதப்படுத்தாமல் எண்ணையாக பிரித்தெடுக்கும் முறை உருக்கு எண்ணை. இந்த முறையில் சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன
பதப்படுத்துதல் இல்லை | எந்த கலப்படமும் இல்லை
தேங்காய் உருக்கு எண்ணெய் நன்மைகள்
🌿பதப்படுத்துதல் இல்லாமல் தேங்காய் பாலில் இருந்து கிடைக்கப்பெறுவதால் இதன் தூய்மை அதிகம்
🌿குழந்தை சருமத்திற்கு மிகவும் ஏற்றது என்பதால் தினமும் மசாஜ் செய்து வருவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவும்
🌿வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் கொழுப்பு அமிலங்கள் (MCFAs) செறிந்துள்ளது
🌿அதிக வெப்பத்தின் காரணமாக இதன் சுவை, தன்மை மாறாத காரணத்தினால் சமையலுக்கு மிகவும் ஏர்புடையது
🌿தலைமுடியை பாதுகாக்க தினமும் தலைக்கு தேய்த்து வரலாம் இதனால் முடி உடைவது தடுக்கப்பட்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது
வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக ஏன் பயன்படுத்த வேண்டும்?
செக்கில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெயில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால் தேங்காய் உருக்கு எண்ணெய் செக்கில் இருந்து பெறப்படும் எண்னையயை விட தூய்மையானது. அதன் சத்துக்களும் பாதுகாக்கப்படுவதால் தாராளமாக சமையலுக்கு அல்லது குழந்தையின் சருமத்தின் மீது மசாஜ் செய்வதற்கு மிகவும் ஏற்றது.
தேங்காய் உருக்கு எண்ணையின் சிறப்புகளையும் தெரிவித்துள்ளோம் மேலும் செக்கு எண்ணெயின் மீது எந்த குறைபாடும் சுட்டிக் காட்டவில்லை. தேங்காய் எண்ணெய் தேர்ந்தெடுப்பது முற்றிலும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டவையே.
அகில் குளியல் பொடி - ஆரோக்கியமான சருமம் மற்றும் பொலிவு
அகில் குளியல் பொடி - ஆரோக்கியமான சருமம் மற்றும் பொலிவு
அகில் மூலிகை குளியல் பொடி - பொலிவான சருமத்திற்கு
100 சதவீதம் இயற்கையான சிவப்பு சந்தனம், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர் மற்றும் ரோஜா போன்ற பாரம்பரிய இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட அகில் குளியல் பொடி சருமத்தை பாதுகாத்து பொலிவுபெறச்செய்து இயற்கையான மணம் கமிழ செய்கிறது.ரசாயனம் அல்லாத இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
💚அகில் குளியல் பொடியின் பொலிவான பயன்கள்
🌿சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது
🌿இயற்கையாகவே நோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளதால் சருமத்தின் மீதான பாக்டீரியா தொற்றை தடுக்க உதவுகிறது
🌿சிவப்பு சந்தனம் மற்றும் சந்தனம் இயற்கையான பொலிவை சருமத்திற்கு ஊக்குவிக்கிறது
🌿உணர்திறன் மிக்க சருமத்திற்கு எந்தவித அழற்சியும் கொடுக்காமல் மென்மையாக வேலை செய்யும்
🌿சரும பிரச்சனைகள் எதுவாயினும் தாராளமாக பக்கவிளைவுகள் இல்லாமல் பயன்படுத்தலாம்
🌸நான் ஏன் இதனை தேர்வு செய்ய வேண்டும்?
முதல் தரத்தில் பெறப்பட்ட சிவப்பு சந்தனம் மற்றும் சந்தன கட்டைகளை பக்குவப்படுத்தி பொடியாக்கி எமது அகில் குளியல் பொடியில் சேர்க்கிறோம். இதில் எந்தவித சமரசமும் செய்யவில்லை. எங்கள் குளியல் பொடி விலை சற்று அதிகமாக இருப்பதாக உணரப்படலாம் இதற்கு காரணம், முதல் தரத்தில் பெறப்பட்ட சந்தன கட்டைகள் விலை சற்று அதிகமாகவே உள்ளதால் எங்களால் முடிந்த அளவு விலை குறைப்பு செய்து உங்களுக்கு வழங்குகிறோம்.
🛁எப்படி பயன்படுத்துவது?
ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அகில் குளியல் பொடியை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போன்று குழைத்து கொள்ளவும் பின்பு சருமத்தின் மீது மென்மையாக தேய்த்து குளிக்கலாம்
